தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Monday, February 12, 2018

TNPSC GROUP 4:குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட தாகூர் கேள்விக்கு தவறான பதில் : தேர்வர்கள் அதிர்ச்சி

 

 குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட தாகூர் கேள்விக்கு தவறான பதில் : தேர்வர்கள் அதிர்ச்சி:



சென்னை: குரூப் 4 தேர்வில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட நான்கு பதில்களும் தவறாக இருந்தது தேர்வர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத் தியது.. டிஎன்பிஎஸ்சி சார்பில் நேற்று குரூப் 4 தேர்வு நடந்தது. மொத்தம் 9,351 காலிப்பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வை மாநிலம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் எழுதினர். தேர்வில் பொது அறிவு மற்றும் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

இதில் பொது ஆங்கிலத்தில் 4வது கேள்வியாக,
when was Rabindranath Tagore born? கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக (A) 18 may 1861, (B) 17 may 1861, (C) 17 may 1816 (D) 17 june 1861 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதில் ஒன்றை தேர்ந்தடுத்து எழுத வேண்டும். குறிப்பிடப்பட்ட 4 பதில்களும் தவறாகும். அவர் பிறந்தது 7 may 1861. இக்கேள்விக்கு பதில் அளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது டிஎன்பிஎஸ்சி எந்த தேர்வை நடத்தினாலும் ஓரிரு நாளில் நடத்தப்பட்ட தேர்வுக்கான “ஆன்சர் கீ” தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடும். அந்த ஆன்சர் கீ வெளியிட்ட 7 நாட்களுக்குள் யாரும் ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம். அதன் பிறகு வல்லூனர் குழு ஆய்வு செய்து தவறு இருக்கும் பட்சத்தில் மதிப்பெண் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments