விஏஓ தேர்வு எழுதிய அசாம் நபர் :
தமிழரின் வேலைவாய்ப்பை பறிக்கும் வெளிமாநிலத்தவர்கள்!!
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் புனித தெரசாள் பள்ளியில் மத்தியப்பிரதேசம், அசாம் மாநிலங்களை சேர்ந்த 5 இளைஞர்கள் நேற்று குரூப் 4 தேர்வு எழுதினர். தமிழ் அறவே தெரியாத இவர்கள் ஆங்கிலத்தில் தேர்வு எழுதியுள்ளனர். இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வக்கீல் டோமினிக் ரவி கூறுகையில், ‘‘தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அரசு பணிக்கான தேர்வு எழுதலாம் என்ற நிலை இருப்பதால் தமிழ் மொழியே தெரியாத வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்குள்ள முகவரிகளை கொடுத்து அரசு பணிக்கான தேர்வுகளில் பங்கேற்கின்றனர். இது தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை அரசும், தேர்வுவாரியமும் கைவிடவேணடும்,’’ என்றார்.

No comments:
Write comments