தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, November 25, 2017

TNPSC GROUP IV: கடலில் கலக்கும் நதிகள்

 


 கடலில் கலக்கும் நதிகள்


1. வங்காளவிரிகுடாவில் கலக்கும் நதிகள்
  கங்கை . பிரமபுத்திரா , கோதாவரி , கிருஷ்ணா  , காவேரி , தாமிரபரணி
  சிந்து , கங்கை . பிரமபுத்திரா  ஆகியன இமாலயன் நதிகள்
  சிந்து , பிரமபுத்ரா  , மானசரோவர் ஏரியில் (திபெத்) உற்பத்தியாகின்றன
  கங்கை கங்கோத்ரியில் ( உத்திரகாண்ட்) உற்பத்தியாகிறது.

  உற்பத்தியாகுமிடத்தில் அதற்கு பாகீரதி என்று பெயர் சமவெளியில் கங்கை என அழைக்கப்படுகிறது

  கங்கை ஹரித்வாரில் சமவெளியை அடைகிறது

  பிரமபுத்திராவுக்கு திபெத்தில் சாங்போ என்று பெயர் அது இந்தியாவில் அருணாசலப்பிரதேசத்தில்

  நுழையும்போது பிரமபுத்திராவாகிறது பிறகு பங்களாதேசில் நுழைந்து ஜமுனா என்றழைக்கப்பட்டு மக்னா என்றபெயரில் கடலில் கலக்கிறது.
  
  கடலில் கலக்கும்போது கங்கையும் பிரமபுத்ராவும் ஒன்றாகிவிடுகின்றன
  சிந்து  இந்தியா பாகிஸ்தான் வழியாக சென்று அரபிக்கடலில் கலக்கிறது
  கங்கையும் , பிரமபுத்திராவும் வங்காளவிரிகுடாவில் நேரடியாக் கலப்பதில்லை வேறு பெயரில் கலக்கின்றன
  
  கங்கை பங்களாதேசில் நுழையும்போது பத்மா என்றபெயரில் அழைக்கப்பட்டு மக்னா என்றபெயரில்  கடலில்கலக்கிறது

  கங்கைதான் இந்திய நதிகளில் நீளமானது
  யமுனை நதி கங்கையின் துணை நதி

 2. கங்கை கரையில் அமைந்துள்ள நகரங்கள்
    பத்ரிநாத் , ஹரித்வார் , ரிஷிகேஷ் , தேவபிரயாகை.  , பாட்னா , காசி (வாரானாசி)
    கான்பூர்
  கங்கையும் யமுனையும் கலக்குமிடம்  அலகாபாத்
  அயோத்தி – சரயு நதிக்கரை
  டெல்லி  - யமுனை நதிக்கரை
  கல்கத்தா – ஹூக்ளி நதிக்கரை
  திப்ருகர் ,  கௌஹாத்தி  - பிரமபுத்ரா நதிக்கரை

3. தாமோதார் நதி கடலில் கலப்பதில்லை ஹூக்ளிநதியில் கலக்கிறது    / River of Sorrow
    தாமோதார் நதியை வங்காளத்தின் துயரம் என்றும் அழைப்பர்
  ஹூக்ளி நதி கங்கையின் கிளை நதி

4. கங்கை கடலில் கலக்குமிடத்தில் சுந்தரவனக்காடுகள் உள்ளன
   சுந்தரவனக்காடுகள் சுனாமியிலிருந்தும் காப்பாற்றும் தன்மையுடையது

5. உலகத்திலேயே பெரிய சமவெளி கங்கைச்சமவெளி

6. கோதாவரி நாசிக் மலையில் உற்பத்தி ஆகிறது

7. காவேரி கூர்க் மலையில் உற்பத்தி ஆகிறது – தட்சின கங்கா என்றும் தென்னிந்தியாவின் கங்கை
  என்றும் அழைக்கப்படுகிறது அரபிக்கடலில் பூம்புகார் என்னுமிடத்தில் கலக்கிறது.

8, நர்மதை  , தப்தி  ஆகியன அரபிக்கடலில் கலக்கின்றன   தப்தி நதிக்கரையில் சூரத்நகரம்

9.அஹமதாபாத்- சபர்மதி நதிக்கரையில்
  ஹைட்ராபாத்- முசி நதிக்கரை   --   லே – சிந்து நதிக்கரை
  நாசிக் – கோதாவரி                  விஜயவாடா  - கிருஷ்ணா
  லூதியானா – சட்லெஜ்

10 . காவேரி நதிப்பிரசினையில் சம்பத்தப்பட்ட மாநிலங்கள்
     தமிழ் நாடு , கர்நாடகா , கேரளா மாநிலங்களும் புதுச்சேரி யூனியன் பிரதேசமும்

11. முல்லைபெரியாறு பிரச்சினை – தமிழ்நாடு – கேரளா

12. தெலுங்கு –கங்கை திட்டம் – கிருஷ்ணாகுடிநீர் திட்டம் என்பது சென்னைக்கு
   குடிநீர் வழங்குவது எம்ஜியார் –இராமாராவ் இணைந்து இந்திராகாந்தி தலைமையில்    துவக்கி வைக்கப்பட்ட திட்டம்.

No comments:
Write comments