தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Wednesday, April 12, 2017

TNPSC_தேர்வாணவர்களுக்கு_ஒரு_முக்கிய_அறிவிப்பு_குறிப்பாக_மாற்றுத்திறனாளி_நண்பர்களுக்கு..

 

-------TNPSC_தேர்வாணவர்களுக்கு_ஒரு_முக்கிய_அறிவிப்பு_குறிப்பாக_மாற்றுத்திறனாளி_நண்பர்களுக்கு

சான்றிதழ் சரிபார்ப்பின் போது நேரில் பார்த்து மனவேதனையுடன் பதிவிடுகிறேன்.. நடக்கவே முடியாத.. கையில் குழந்தை போல் தூக்கிவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சரியான வழிகாட்டி விழிப்புணர்வு இல்லாமல் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மட்டும் எடுத்து வந்தனர் ஆனால் அவர்களிடம் மாவட்ட அரசு மருத்துவனையில் உள்ள  மூன்று_மருத்துவக்குழு_அடங்கிய_மருத்துவஅமர்வு_வழங்கிய_சான்றிதழ்_TNPSC_ஆல்_கேட்கப்பட்டது_எனவே அவர்கள் கால அவகாசத்துடன் திருப்பி அனுப்பப்பட்டனர்.. ஒரு சிலர் அம்மருத்துவக்குழு மூன்று பேர் கையெழுத்து இட்ட சான்றும் கொண்டு வந்திருந்தனர் ஆனால் அதுவும் நிராகரிப்பு காரணம் அது TNPSC க்கான LETTER FORMAT ல் இல்லை என கூறினர். இவ்வாறு திருப்பி அனுப்பப்ட்டவர்கள் ஒவ்வொருவரும் மதுரை.. தேனி.. போன்ற தொலைவிலிருந்து வந்தவர்களும் கூட.. அதனால் இனி எந்த மாற்றுத்திறனாளி நண்பர்களும் அலைச்சல் இல்லாமல் ஒரே தடவையில் சென்று நல்லபடியாக TNPSC சென்று வர கீழ்கண்ட சரியான மருத்துவ விவரங்களை பதிவிடுகிறேன்..
1. உங்களது ஊனத்தின் விழுக்காடு அதில் எழுதி இருக்க வேண்டும்.
2. எந்த தேர்விற்கு தகுதியானீர்களோ அந்த வேலைக்கு இவரது ஊனம் எந்த விதத்திலும் தடையாக இருக்காது என தெளிவாக மருத்துவரால் எழுதி இருக்க வேண்டும்.
அதாவது GROUP 4 என்றால் GROUP 4 பதவிக்கு என எழுதியிருக்க வேண்டும்.
3. கீழ்கண்ட மருத்துவ மாதிரி சரியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த கடித FORMAT ஏற்றுக்கொள்ளப்பட்டது.. இதில் தான் எல்லாமே வர வேண்டும்.                  https://tnpsctrbtricks.blogspot.in
4. உங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டையும் சேர்த்து காண்பிக்க வேண்டும்.
#உங்களுக்கு_இந்த_பதிவு_தேவையில்லை_என்றாலும்_தயவு_செய்து_பகிருங்கள் 
 மிழ்நாட்டின்_ஏதாவது_ஒரு_மூலையிலிருக்ககும்_ஒரு_மாற்றுத்திறனாளிக்கு_உதவும்_அவரது_வீண்_அலைச்சசலைத்_தடுக்கும்_நன்றி.
..-------------------------------------------------------------------------------------------------

No comments:
Write comments