Problems on Age (வயது கணக்கீடுகள் ) - 1
வழிமுறைகள்:
- கொடுக்கப்பட்ட வினாக்களில் பெயர் தெரியாத நபரின் வயதை A மற்றும் B போன்ற மாறிகளால் குறிக்க வேண்டும்.
- வினாக்களில் கொடுக்கப்பட்ட வாக்கியங்களை படிப்படியாக கணித சமன்பாடாக மாற்ற வேண்டும்
- சமன்பாட்டில் உள்ள தெரியாத நபரின் வயது அல்லது மாரியை சமன்பாடுகளை தீர்ப்பதன் மூலம் கிடைக்கும்.
- முடிவில் சமன்பாட்டை தீர்ப்பதன் மூலம் கிடைக்கும் மதிப்புகள் கொடுக்கப்பட்ட வாக்கியங்களை அல்லது சமன்பாடுகளை பூர்த்தி செய்கின்றனவா என உறுதி செய்து கொள்ளவேண்டும்.
பயிற்சி வினா & விடைகள்:
1. 4 ஆண்டுகள் இடைவெளியில் பிறந்த 5 குழந்தைகளின் வயது கூட்டுத்தொகை 80 ஆண்டுகள் ஆகிறது எனில், இளைய குழந்தையின் வயது என்ன?
விளக்கம்:
குழந்தைகளின் வயதை X என்று எடுத்துக்கொள்வோம்
X, (X + 4), (X+ 8), (X + 12), (X+16) என எடுத்துக்கொள்வோம்
(4 ஆண்டுகள் இடைவெளி என்பதால் 4-ன் கூடுதல் எடுக்கவும்)
அவர்களின் வயதுகளில் கூடுதல்
X + (X + 4) + (X+ 8) + (X + 12)+ (X+16)= 80
5X + 40 = 80
5X =80-40
X = 40/5
X = 8
இளைய குழந்தையின் வயது 8 ஆண்டுகள்
விடை: 8 ஆண்டுகள்
.................................................................................................................................................................
2. "நான், நீ பிறக்கும்போது உன்னுடைய தற்போதைய வயதில் இருந்தேன்" என்று தந்தை மகளிடம் சொல்கிறார். தற்போது தந்தைக்கு 42 வயது எனில், 6 வருடங்களுக்கு முன் மகளின் வயது என்ன?
விளக்கம்:
மகளின் தற்போதைய வயதை X என்று எடுத்துக்கொள்வோம்
(42 - X ) = X => 2X = 42 => X = 21
6 வருடங்களுக்கு முன்பு மகளின் வயது
=> (21 - 6) = 15
விடை: 15 வயது
.................................................................................................................................................................
3. மூன்று நபர்களின் வயதுகளின் விகிதம் 5: 7: 9 அவர்களின் வயதுகளின் கூட்டுத்தொகை 8 வருடங்களுக்கு முன் 60 எனில், தற்போதைய வயது என்ன?
விளக்கம்:
மூன்று நபர்களின் வயதுகள் முறையே 5X , 7X, 9X எனில்
8 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் வயதுகளில் கூட்டுத்தொகையானது
(5X - 8) + (7X - 8) + (9X - 8) = 60
=> 5X - 8 + 7X - 8 + 9X - 8 =60
=> 21X - 24 = 60
=> X = (60 + 24) / 21
=> X = 4ஆண்டுகள்
மூன்று நபர்களின் வயதுகள் முறையே
5 x 4 = 20, 7 x 4 = 28, 9 x 4 = 36
விடை: 20,28,36
.......................................................................................................................................................
4. வீனா மற்றும் ரீனாவின் தற்போதைய வயதுகளில் விகிதம் 5:7. 5 வருடங்களுக்குப் பிறகு வீனா வயது 25 அணில், ரீனாவின் தற்போதைய வயது என்ன?
விளக்கம்:
வீனா மற்றும் ரீனாவின் தற்போதைய வயதுகளில் விகிதம் 5:7 என்பதால் 5X ,7X என எடுத்துக்கொள்வோம்
5 ஆண்டுகளுக்குப் பிறகு
=> 5X + 5 = 25 => 5X = 20
=> X = 4 எனில் ரீனாவின் தற்போதைய வயது
=> 3X = 3 x 4 = 12 ஆண்டுகள்
விடை; 12 ஆண்டுகள்
இதை PDF வடிவில் DOWNLOAD செய்ய இந்த லிங்கை கிளிக் செய்ய

No comments:
Write comments