தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Friday, January 6, 2017

6th Tamil Question and Answer - 1

 

.இராமலிங்க  அடிகளாரின் சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார், புரட்சி துறவி

2.இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் - மருதூர் (கடலூர் மாவட்டம்)

3.இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள்  - ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை  கண்ட வாசகம், வடிவுடைமானிக்க மாலை, எழுத்தறியும் பெருமான் மாலை

4.கந்தக்கொட்டத்து இறைவன் மீது இராமலிங்க அடிகளார்  பாடிய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - வடிவுடைமானிக்க மாலை

5.இராமலிங்க அடிகளார் திருவொர்ரியூர் சிவபெருமான் மீது போற்றி பாடிய நூல் - எழுத்தறியும் பெருமான் மாலை

6.இராமலிங்க அடிகளார் பதிப்பித்த நூல்கள்  - தொண்டமண்டலசதகம், ஒழுவிலோடுக்கம், சின்மயதீபிகை

7.வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய  கொண்டவர்- இராமலிங்க அடிகளார்

8.இராமலிங்க அடிகளார் பாடல்கள் எந்த பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன - திருவருட்பா

9.இராமலிங்க அடிகளார் ஆசிரியர் பெயர் - காஞ்சி மகாவித்வான் சபாபதி முதலியார்

10.மனுமுறை கண்ட வாசகம் என்ற நூல் யாருடைய வரலாற்றை கூறுகிறது - மனுநீதி சோழன் வரலாறு

11.இராமலிங்க அடிகளார் தருமச்சாலையை நிறுவிய ஆண்டு - 1867

12.இராமலிங்க அடிகளார் அறிவுநெறி விளங்க சத்தியனாசபையை நிறுவிய ஆண்டு - 1872

13.இராமலிங்க அடிகளாரின் கோட்பாடு - ஆன்மநேய ஒருமைப்பாடு

14.இராமலிங்க அடிகளாரின் கொள்கை - ஜீவகாருண்யம் (அதுவே பேரின்ப வீட்டின் திறவுகோல்)

15.இராமலிங்க அடிகளாரை "புதுநெறி கண்ட புலவர்" என்று பாராட்டியவர் - பாரதியார்

16.திருவருட்பாவை "மருட்பா" என்று கூறியவர்  - ஆறுமுக நாவலர்

17.திருவருட்பா நூல் அமைப்பு - 6 திருமுறைகள், 5818 பாடல்கள்

18.இராமலிங்க அடிகளார் ஆண்டு - (1823-1874)

19.நாலடியார் பாடல்கள் யாருடைய தொகுப்பாகும் - சமண முனிவர்கள் 

20.நாலடியாரின் வேறு பெயர்கள் - சாம  வேதம்,வேளாண் வேதம், நாலடி நானூறு 

21.நாலடியாருக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் - பதுமனார்

22.நாலடியார் நூல் அமைப்பு - அறத்துப்பால்-13, பொருட்பால்-24, காமத்துப்பால்-3 (மொத்தம்-40)

23.திருக்குறள் சிறுப்பு பெயர் - அடையெடுத்த கருவியாகு பெயர் 

24.திருக்குறள் நூல் அமைப்பு - அறம்(4இயல் + 38 அதிகாரம்)
                                                               பொருள்(3இயல் + 70 அதிகாரம்)
                                                               இன்பம்(2இயல் + 25அதிகாரம்)
                                                               மொத்தம் (9இயல் + 133 அதிகாரம் + 1330 குறள்)

 25.திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் - பரிமேலழகர்

26."எப்பாவளரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்தமொழி" என்று கூறியவர்  - கல்லாடர் 

No comments:
Write comments