தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Monday, June 1, 2020

2020-21 கல்வியாண்டில் 100 நாட்கள் மட்டுமே பள்ளிகள்

 

🌴 2020-21 கல்வியாண்டில் 100 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கத்  திட்டம் ..


🌻ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பள்ளிகள் குறைந்தது 3 மாதங்கள் தாமதத்திற்குப் பிறகே திறக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

🌻கல்வி ஆண்டு மூன்று மாதங்கள் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.

🌻இதன் படி மேல்நிலைப் பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்திலும்,1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செப்டம்பரில் மாதத்திலும் திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

🌻கொரோனாப் பரவல் காரணமாக 2020 -2021 கல்வியாண்டில் பணிநாட்கள் 100 நாட்களாகக் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌻மனிதவள மேம்பாட்டுத் துறையிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன.

🌻இதுவரை நடத்தப்பட்டிருக்கும் ஆலோசனைகளின் படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரைப் பயிலும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது.

🌻6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் 4 நாட்களும், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வரையிலும் வகுப்புகள் நடத்தப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌻மீதமிருக்கும் நாட்கள் மாணவர்களை வீட்டிலிருந்தே படிக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஊக்குவிக்க வேண்டும். மேலும் பாடத்திட்டங்களையும் குறைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.

No comments:
Write comments