தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, January 7, 2017

பெரும் நூல்கல் அதன் அடைமொழிகள்

 


திருக்குறள் :
                         வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, முப்பால், வள்ளுவப் பயன், பொய்யாமொழி, தெய்வநூல், உலகப்பொதுமறை, உத்திரவேதம்.

சிலப்பதிகாரம்: 
                          ஒற்றுமைக் காப்பியம், மூவெந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சிலம்பு, முதல் காப்பியம், சமுதாயக் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.

கம்பராமாயணம்:
                         இராமவதாரம், இராமகாதை, கம்பச்  சித்திரம்,கம்ப நாடகம்.

பெரியபுராணம்: 
                        திருத்தொண்டர் புராணம், சேக்கிழார் புராணம், வழிநூல்,

சீவகசிந்தாமணி - மணநூல்

அகநானூறு - நெடுந்தொகை

பழமொழி - முதுமொழி,உலக வசனம்

இலக்கண விளக்கம் - குட்டித் தொல்காப்பியம்

பட்டினப்பாலை - வந்சிநெடும் பாட்டு

கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை

புறநானூறு - புறம், புறப்பட்டு, தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்

திருமுருகாற்றுப்படை - புலவராற்றுப் படை

பெரும்பானாற்றுப்படை - பாணாறு

மலைபடுகடாம் - கூத்தராற்றுப்படை

முல்லைப்பாட்டு - நெஞ்சாற்றுப்படை

குறிஞ்சிப்பாட்டு - பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு

முக்கூடர்பள்ளு - உழத்திப்பாட்டு

பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை

சிலப்பதிகாரம், மணிமேகலை - இரட்டைக் காப்பியங்கள்

மணிமேகலை - மணிமேகலை துறவு

மணிமேகலை, குண்டலகேசி - பௌத்தக் காப்பியங்கள்

திருமந்திரம் - தமிழர் வேதம்

நேமிநாதம் - சின்னூல்

நீலகேசி - நீலகேசி தெருட்டு

திருக்கயிலாய ஞான உலா - குட்டித்திருவாசகம்

தாயுமானவர் பாடல்கள் - தமிழ் மொழியின் உபநிடதங்கள் 

No comments:
Write comments