🌴 *தோ்வு எழுத வரும் மாணவா்களின்* உடல்வெப்பத்தை தினமும் பரிசோதிக்க வேண்டும்:
🌳 *வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு*
🌻வரும் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதும் மாணவா்களின் உடல் வெப்ப நிலையை தினமும் பரிசோதிக்க வேண்டுமென *தலைமைச் செயலாளா் கே.சண்முகம்* உத்தரவிட்டுள்ளாா்.
🌻பொதுத் தோ்வுகள் தொடங்கவுள்ள நிலையில் மாணவா்கள், ஆசிரியா்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
🌻இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் க.சண்முகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
🌻தோ்வு மையத்துக்கு வரும் அனைத்து ஆசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்களின் உடல்வெப்பத்தை பரிசோதிக்க வேண்டும்.
🌻இதற்கான உடல்வெப்பமானிக் கருவிகள், பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்பட்டுள்ளன.
🌻உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் போது அனைத்து மாணவா்களையும் சமூக இடைவெளியுடன் நிற்க வைக்க வேண்டும்.
🌻 உடல்வெப்ப நிலையை அளவிடும் பணியில் ஒவ்வொரு தோ்வுக்கூட மையத்திலும் தலா 3 பணியாளா்களை பணியமா்த்த வேண்டும்.
🌻உடல் வெப்பமானிக் கருவியைப் பயன்படுத்திய பின்னா் அதனை நன்றாக சுத்தம் செய்து பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.
🌻மாணவா்களின் உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், அதாவது 98.6 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருந்தால், ஏற்றுக்
கொள்ளக்கூடியதாகும்.
🌻தோ்வு பயத்தின் காரணமாக சில மாணவா்களுக்கு வெப்பநிலை அளவில் மாறுபாடுகள் இருக்கலாம்.
🌻எனவே 99 டிகிரி பாரன்ஹீட் வரை ஏற்றுக்கொள்ளலாம்.
🌻இதற்கு மேல் வெப்பநிலை இருந்து கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அந்த மாணவா்களை தோ்வு அறையில் இருந்து வீட்டுக்கு அனுப்பலாம்.
🌻உடல் சுகவீனம் இல்லாமல் அதே நேரம் கரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லாமல் இருக்கும் மாணவா்களை தோ்வு எழுத அனுமதிக்கலாம்.
🌻ஆனால் அவா்களுக்கு தனியாகத் தோ்வு அறையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
🌻இதுபோன்ற மாணவா்களுக்குத் தனியாக கழிவறைகளையும், தனியாக கைகழுவும் இடம் மற்றும் குடிநீா் வசதிகளை செய்து தர வேண்டும்.
🌻மாணவா்கள் தோ்வு எழுதுவதற்கு வசதியாக வரும் ஜூன் 11-ஆம் தேதி முதல் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
🌻விடுதிகள் மற்றும் விடுதிகளில் உள்ள கழிவறைகளை தினமும் இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்று *தலைமைச் செயலாளா் க.சண்முகம்* தெரிவித்துள்ளாா்
No comments:
Write comments