உங்கள் மொபைல் ஜீடி வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது இனிமேல் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
- வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது இனிமேல் பாதிக்காமல் இருக்கவோ செய்ய வேண்டியது. குறிப்பிட்ட 41 ஆப்ஸ்கள் இருந்தால் உடனே அன்இன்ஸ்டால் செய்து விடவும்
- ஸ்மார்ட்போனின் பாதுகாப்பை அதிகரிக்க உடனடியாகச் சிறந்த ஆன்டிவைரஸ் ஒன்றை நிறுவுவது நல்லது.
- இதன் மூலம் வைரஸை நீக்கலாம். மேலும் வைரஸ் புதிதாகப் பாதிக்கப்படாமலும் தடுக்க முடியும்.
- பாதுகாப்பற்ற இணையதளங்களிலிருந்து பைல்களை டவுன்லோட் செய்வதைத் தவிர்க்கவும்.
- ஸ்மார்ட்போனை எப்பொழுதும் சாப்ட்வேர் அப்டேட் செய்யவேண்டியது அவசியம். இதன் மூலமாக பெரும்பாலான வைரஸ் தாக்குதலை தடுக்கலாம்.
- இணையதளங்களை VPN மூலமாக பாதுகாப்பாகப் பார்வையிடலாம்.
- apk பைல்கள் மூலமாக ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- தேவையற்ற லின்க்குகளை கிளிக் செய்வதைத் தவிர்க்கலாம் மேலும் தேவையற்ற ஆப்ஸ்களை நீக்கி விடவும் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வதற்கு முன்பாக அந்த ஆப் நமது ஸ்மார்ட்போனில் எதையெல்லாம் ஆக்சஸ் செய்வதற்கு அனுமதி கேட்கிறது என்பதைப் பார்த்துவிட்டு இன்ஸ்டால் செய்யலாம்.

No comments:
Write comments