தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Wednesday, May 24, 2017

அணி இலக்கணம்:

 

-----அணி இலக்கணம்:
---------------------------------------------------------------------------------------------------
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது.[1] அவற்றுள் சில,

  1. அதிசய அணி(உயர்வு நவிற்சி அணி)
  2. அவநுதியணி
  3. ஆர்வமொழியணி(மகிழ்ச்சி அணி)
  4. இலேச அணி
  5. உதாத்தவணி
  6. ஏதுவணி
  7. ஒட்டணி
  8. ஒப்புமைக் கூட்டவணி
  9. ஒழித்துக்காட்டணி
  10. சங்கீரணவணி
  11. சமாகிதவணி
  12. சிலேடையணி
  13. சுவையணி
  14. தற்குறிப்பேற்ற அணி
  15. தன்மேம்பாட்டுரை அணி
  16. தன்மையணி(தன்மை நவிற்சி அணி,இயல்பு நவிற்சி அணி)
  17. தீவக அணி
  18. நிதரிசன அணி(காட்சிப் பொருள் வைப்பு அணி)
  19. நிரல்நிறை அணி
  20. நுட்ப அணி
  21. பரியாய அணி
  22. பரிவருத்தனை அணி
  23. பாவிக அணி
  24. பின்வருநிலையணி(பொருள் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)
  25. புகழாப்புகழ்ச்சி அணி
  26. புணர்நிலையணி
  27. மயக்க அணி
  28. மாறுபடுபுகழ்நிலையணி
  29. முன்னவிலக்கணி
  30. வாழ்த்தணி
  31. விசேட அணி(சிறப்பு அணி)
  32. விபாவனை அணி
  33. விரோதவணி
  34. வேற்றுப்பொருள் வைப்பணி
  35. வேற்றுமையணி

No comments:
Write comments