தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Thursday, March 16, 2017

TN BUDGET 2017-18: 150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும்

 

TN BUDGET 2017-18:    150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் 

என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார். மேலும் 



 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.26,932 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி துறை

உயர்கல்வி துறைக்கு ரூ.3,680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். உயர்கல்வி உதவி தொகைக்காக ரூ.1,580 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்றார்.

பின்னர் அவர்ராஜினாமா செய்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். இதை தொடர்ந்து தமிழக அரசின் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசின் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

No comments:
Write comments