உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஏப்ரல் இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்
சென்னை உயர் நீதிமன்ற உத்தர வின் படிதான் ஏப்ரல் இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்குப் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு அவசர அவசரமாக நடத்தப்படுவதாகவும், தேர்வு நடத்துவதில் குழப்பம் உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டு களாக தகுதித்தேர்வு நடத்தப்பட வில்லை என்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளி யிட்டுள்ளார். தகுதித் தேர்வு தேர்ச் சிக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் கடந்த 3 ஆண்டுகளாக தகுதித்தேர்வு நடத்த இயல வில்லை.தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இன்னொரு வழக்கில் சென்னை உயர் நீதி்மன்றம், ஏப்ரல் மாதத்துக்குள் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று ஆணை வழங்கியது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அறிவிப்பு கடந்த பிப்வரி 24-ம் தேதி வெளியிடப்பட்டது. ஜுன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் காலி யிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட தேதி களில் தகுதித் தேர்வு நடத்தப்படுகி றது. இத்தேர்வுக்காக 10 லட்சம் இளைஞர்கள் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை குழப்பும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் இதுபோன்று அறிக்கை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.---------------------------------------------------------------------------------------------------
Wednesday, March 29, 2017
உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஏப்ரல் இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- 6th Tamil
- BANK
- C
- Dinamalar
- GENERAL KNOWLEDGE
- history
- job
- jobs
- news
- Pg
- PG TRB
- PSYCHOLOGY
- REASONING
- Result
- Tamil
- tamilnadu gov job
- tech
- TET
- TETQ
- TNPSC
- TNPSC மாதிரி வினா & விடை
- TRB
- video
- இந்திய
- இந்திய பிரதமர்கள் -காலம்
- இந்திய ஜனாதிபதிகள்
- இலக்கணம்
- இலக்கியம்
- உலகம்
- உளவியல்
- தமிழ்
- தமிழ் செய்யுள்
- நூல்கல்
- பொதுஅறிவு
- மாநிலங்கள் - தலைநகரங்கள்
- முக்கிய தினங்கள்
- விளையாட்டு
No comments:
Write comments