| டெட் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச் முதல்வாரத்தில் வினியோகிக்க, நோடல் மையங்களை, தயார் நிலையில் வைக்குமாறு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்), வரும் ஏப்ரல் 29, 30 ஆகிய இரு தேதிகளில் நடக்கிறது.
இதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம் இறுதியில் வினியோகிக்கப்படுவதாக, தகவல் வெளியானது. இதற்கு, தேதி குறிப்பிடாததால், ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மார்ச் முதல்வாரத்தில் விண்ணப்பம் வினியோகிக்க ஏற்பாடு செய்யுமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை
டெட் தேர்வு விண்ணப்பங்கள் வினியோகிக்க, ஒன்றியத்திற்கு இரு பள்ளிகள் வீதம்,நோடல் மையங்களாக, தேர்வு செய்ய வேண்டும்.
இப்பள்ளிகளின் முகவரியை, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பள்ளிகள், பொதுத்தேர்வு நடக்காத, மையங்களாக இருப்பது அவசியம். இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|

No comments:
Write comments