தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, January 28, 2017

TNTET :ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

 


ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
ஆசிரியர்கள்நியமனத்தில்வெயிட்டேஜ் மதிப்பெண்மதிப்பெண் முறையைரத்து செய்து விட்டுதகுதித் தேர்வுமதிப்பெண்அடிப்படையில் மட்டும்ஆசிரியர்களைநியமிக்க வேண்டும்என்று பாமக நிறுவனர்ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்றுஅவர் வெளியிட்டஅறிக்கையில், ''தமிழகத்தில் ஆசிரியர்தகுதித் தேர்வு ஏப்ரல்மாத இறுதிக்குள்நடத்தப்படும் என்றும்,அதற்கான அறிவிப்புஅடுத்த இரு நாட்களில்
வெளியிடப்படும்என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்பாண்டியராஜன்அறிவித்திருக்கிறார்.தகுதித் தேர்வு நடத்தும்தமிழக அரசின் இந்தமுடிவுவரவேற்கத்தக்கது.
தமிழகத்தி வெற்றிபெற்ற 30,000 பேருக்குஇன்னும் வேலைகிடைக்கவில்லைஎன்பதால், அவர்களைக்கொண்டே தமிழகத்தில்காலியாக உள்ளஆசிரியர் பணியிடங்கள்நிரப்பப்படும் என்றும்,புதிதாக தகுதித் தேர்வுநடத்தப்படாது என்றும்அமைச்சர்பாண்டியராஜன்கூறியிருந்தார்.
அவர் கூறிய தகவல்கள்அறியாமையில்வெளிப்பட்டவைஎன்பதையும்,ஆண்டுக்கு ஒரு முறைதகுதித் தேர்வுநடத்தப்பட வேண்டியதுசட்டப்படி கட்டாயம்என்பதையும் கடந்த 13-ஆம் தேதி வெளியிட்டஅறிக்கையில்ஆதாரங்களுடன்விளக்கியிருந்தேன்.அதை ஏற்றுக் கொண்டபள்ளிக் கல்வித்துறைஅமைச்சர்பாண்டியராஜன், தகுதித்தேர்வு நடத்தப்படும்என்றுஅறிவித்திருக்கிறார்.முந்தையஅமைச்சர்களைப் போலபிடிவாதம் பிடிக்காமல்தவறைஒப்புக்கொண்டதுடன்,அதை திருத்திக்கொண்டு ஆசிரியர்தகுதித் தேர்வைநடத்துவதாகஅறிவித்திருப்பது நல்லஅறிகுறியாகத்தோன்றுகிறது.
அதேநேரத்தில்ஆசிரியர்கள்நியமனத்தில்இழைக்கப்படும் சமூகஅநீதி ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்துவதால்மட்டும் தீர்ந்து விடாது.ஆசிரியர் தகுதித்தேர்வே சமூக நீதிக்குஎதிரானது; அத்தேர்வுஒழிக்கப்பட்டு,வேலைவாய்ப்புஅலுவலக பதிவுமூப்பின் அடிப்படையில்ஆசிரியர்கள்நியமிக்கப்பட வேண்டும்என்பதுதான் பாமகவின்நிலைப்பாடு ஆகும்.
ஆனால், அதுஉடனடியாகசாத்தியமில்லைஎன்பதால் தான்ஆசிரியர் தகுதித் தேர்வுநியாயமான முறையில்நடத்தப்பட வேண்டும்;அதில் எடுக்கப்படும்மதிப்பெண்களின்அடிப்படையில்ஆசிரியர்கள்நியமிக்கப்பட வேண்டும்என்று பாமகவலியுறுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி,அனைத்துப்பிரிவினருக்கும் ஒரேமாதிரியான தகுதிமதிப்பெண்நிர்ணயிக்கக் கூடாது;இட ஒதுக்கீட்டுப்பிரிவினருக்குதனித்தனியாக தகுதிமதிப்பெண்களைநிர்ணயிக்க வேண்டும்என பாமகவலியுறுத்தியது.அதையேற்று இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கான தகுதிமதிப்பெண்ணை 5%குறைத்த அரசு, அதற்குப்பதிலாக ஆசிரியர்கள்நியமனத்திற்குவெயிட்டேஜ் மதிப்பெண்முறையைஅறிமுகப்படுத்தியதுதான் அநீதியாகும்.
வெயிட்டேஜ் மதிப்பெண்முறைப்படி தகுதித்தேர்வு மதிப்பெண்களில்60 விழுக்காடு மட்டுமேகணக்கில்கொள்ளப்படும்.மீதமுள்ள 40%வெயிட்டேஜ்மதிப்பெண்கள் 12ஆம்வகுப்புப் பொதுத்தேர்வு,பட்டப்படிப்பு, பி.எட்.தேர்வு ஆகியவற்றில்பெற்றமதிப்பெண்களைக்கொண்டுகணக்கிடப்படுகிறது. 12-வகுப்பு பொதுத்தேர்வாகஇருந்தாலும்,பட்டப்படிப்பாகஇருந்தாலும் 10ஆண்டுகளுக்கு முன்வழங்கப்பட்டதை விடஇப்போது தாராளமாகமதிப்பெண்வழங்கப்படுகிறது.இதனால் 10ஆண்டுகளுக்கு முன்ஆசிரியர் படிப்புபடித்தவர்களை விட,இப்போது ஆசிரியர்படிப்பு படித்தவர்களின்வெயிட்டேஜ் மதிப்பெண்அதிகமாக இருக்கும்என்பதால் அவர்கள்மிகவும் எளிதாக தேர்ச்சிபெறுவர்.
ஆனால்,பத்தாண்டுகளுக்கு முன்படித்தவர்கள் தகுதித்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்றாலும்பள்ளி மற்றும்கல்லூரிகளில் அவர்கள்பெற்ற மதிப்பெண்குறைவு என்பதால்அவர்களுக்கு வேலைகிடைக்காது.
கடந்த 2013-ஆம் ஆண்டுநடந்த ஆசிரியர்கள்நியமனத்தின் போதுதகுதித் தேர்வில் 150க்கு85 மதிப்பெண் எடுத்தபலருக்கு அவர்கள் 12-ஆம் வகுப்பு மற்றும்பட்டப்படிப்பில் அதிகமதிப்பெண்எடுத்திருந்ததால்எளிதாக வேலைகிடைத்து விட்டது.அதேநேரத்தில் தகுதித்தேர்வில் 120 மதிப்பெண்எடுத்த பலருக்கு, பள்ளிமற்றும் கல்லூரிதேர்வுகளில் எடுத்தமதிப்பெண் குறைவாகஇருந்ததால் ஆசிரியர்பணி கிடைக்கவில்லை.இது மிகப்பெரிய சமூகஅநீதி ஆகும்.
இந்தியாவில் வேறு எந்தமாநிலத்திலும்இத்தகைய வினோதமுறைகடைபிடிக்கப்படுவதில்லை. பள்ளி மற்றும்கல்லூரித் தேர்வுமதிப்பெண்களில்நம்பிக்கை இல்லாமல்தான் தகுதித் தேர்வுமுறை கொண்டுவரப்பட்டது. ஆனால்,தகுதித் தேர்வுமதிப்பெண்களில் முழுநம்பிக்கையில்லாமல்அதில் 60%மதிப்பெண்களையும்,பள்ளி மற்றும் கல்லூரித்தேர்வுகளில் 40%மதிப்பெண்களையும்எடுத்துக் கொள்வதுகேலிக்கூத்தானது. இதுதகுதித் தேர்வு கொண்டுவரப்பட்டதன் அடிப்படைநோக்கத்தையேசிதைத்துவிடக்கூடியதாகும்.
எனவே, ஆசிரியர்கள்நியமனத்தில்வெயிட்டேஜ் மதிப்பெண்முறையை ரத்து செய்துவிட்டு தகுதித் தேர்வுமதிப்பெண்அடிப்படையில் மட்டும்ஆசிரியர்களைநியமிக்க வேண்டும்.இல்லாவிட்டால் தகுதித்தேர்வு முறையையும்ரத்து செய்து விட்டு,வேலைவாய்ப்புஅலுவலக பதிவு மூப்புஅடிப்படையில்ஆசிரியர்களைநியமிக்க தமிழக அரசுமுன்வர வேண்டும்''என்று ராமதாஸ்கூறியுள்ளார்.

No comments:
Write comments