தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, January 7, 2017

6th tamil Question and Answer - 2

 


1.திருவள்ளுவர் ஆண்டை கூறி யவர் - மறைமலைஅடிகள் 

2."வள்ளுவனை பெற்றதால் புகழ் வையகமே" என்று கூறி யவர் - பாரதிதாசன்

3.ஞானப்பிரகாசம் முதன் முதலில் திருக்குறளை பதிப்பித்த ஆண்டு - 1812

4.உ.வே.சா வின் இயற்பெயர் - வேங்கடரத்தினம் 

5.உ.வே.சா வின் ஆசிரியர் பெயர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை 

6.உ.வே.சா வை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் - ஜி.யூ. போப் , சூலியல் வின்சோன் 

7.உ.வே.சா விற்கு நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு - 2006

8.99 மலர்கள் கொண்ட நூல் - குறிஞ்சிப் பாட்டு 

9.உ.வே.சா அவர்கள் ஓலைச்சுவடிகளை கண்டெடுத்த இடம் - கொடுமுடி (ஈரோடு மாவட்டம்)

10.உ.வே.சா நூல் நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு, இடம் - 1942, சென்னை பேசன் நகர் 

11."கடைசிவரை நம்பிக்கை" என்ற சிறுகதை இடம் பெற்ற நூல் - டென்லிட்டில் பிங்கர்ஸ் 

12.டென்லிட்டில் பிங்கர்ஸ் நூலை எழுதியவர் - அரவிந்த் குப்தா

13.காகிதத்தில் உருவம் செய்யும் முறையை உருவாக்கியவர்கள் - ஜப்பானியர்கள்

14.காகிதத்தில் உருவம் செய்யும் முறை ஜப்பானியர்களால் எவ்வாறு அழைக்கப்படுகிறது - ஓரிகாமி

15.ஜப்பானியர் வணங்கும் பறவை இனம் - கொக்கு 

16.பருவநிலை மாற்றத்திற்காக பறவைகள் இடம் பெயர்வது - வலசைபோதல்

17.நம் நாட்டில் எத்தனை வகை பறவைகள் உள்ளன - 2400

18.தமிழ் நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை - 13

19.உலகில் எத்தனை வகை பாம்புகள் உள்ளன - 2750


20.இந்தியாவில் எத்தனை வகை பாம்புகள் உள்ளன - 244

21.இந்திய அரசு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய ஆண்டு - 1972

22.கூடுகட்டி வாழும் ஒரே வகை பாம்பு இனம் - இராஜனாகம்

23.பாம்பின் விஷம் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது - 4வகை (காளி, காளாத்திரி, நீலி, நீளிகண்டி)

24.எழுதப்படாத வாய்வழியாக பரவுகின்ற கதைகள்  எவ்வாறு அழைக்கப்படுகின்றன - வாய்மொழி இலக்கியம் 

25.நாட்டுப்புற பாடல்கள் எத்தனை வகைப்படும் - 7வகை 
     1) தாலாட்டு  2) விளையாட்டு   3) சடங்கு   4) கொண்டாட்டப் பாடல்  5)ஒப்பாரி   6) வழிபாட்டு   7) தொழிற் பாட்டு 

No comments:
Write comments