2018க்கு PG TRB தேர்வு எப்போது ?
TRB தனது Annual planner 2018 ஐ தற்போது வெளியிட்டுள்ளது. இதில் government Polytechnic lecturers,Arts college lectures,AEEO மற்றும் TET 2018 தேர்வு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் PG தேர்வு தேதி பற்றிய அறிவிப்பு இடம் பெறவில்லை என்பது நீண்ட நாட்களாய் தேர்வுக்கு தயாராவோரின் ஆதங்கம்.
PG தேர்வு பற்றி அட்டவணையில் செய்தி இல்லையென்றாலும், June 2018 க்கு பிறகு PG தேர்வு அறிவிப்பு வர வாய்ப்புண்டு. ஏனெனில் பொதுவாக அரசுப் பள்ளிகளில் உள்ள PG காலிப்பணியிடங்கள் May 31 வரை கணக்கிடப்பட்டு அதன் பிறகு அரசாணை வடிவம் பெற்று TRB மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
நடந்து முடிந்த PG தேர்வில்,1663 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, பின்பு மே 2017 வரையான 1712 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டு Addendum notification என்று மொத்தம் 3375(1663+1712) பணியிடங்களுக்கு ஜூலை 2017 PG தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் இனி மே 31 2018 வரை உள்ள காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு ஜூனில் அது அரசாணை வடிவம் பெற்று PG தேர்வு வரத் தான் போகிறது,ஏற்கனவே 2017 notification ன் 1000 க்கு மேற்ப்பட்ட back log vacancies உள்ளது.
ஆகையால் அதுவும் சேர்ந்து நல்ல கணிசமான PG காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆகையால் PG தேர்வுக்கு தயாராவோர் எந்த வித பயமுமின்றி கண்டிப்பாக PG தேர்வு வரும் என்ற நம்பிக்கையோடு படித்துக்கொண்டு இருப்போம்.
இப்படிக்கு,
உங்களைப் போன்று PG தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் ஒருவன்.

No comments:
Write comments