வாட்ஸ்ஆப் மூலம் பணம் அனுப்பும் செட்டிங்ஸை ஆக்டிவேட் செய்வது எப்படி.?
![]() |
இந்தியாவின் யுனிஃபைட் பேமன்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அடிப்படையிலான வாட்ஸ்ஆப் பேமன்ட்ஸ் அம்சமானது இப்போது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு தளத்திலுமே இந்திய பயனர்களுக்கு கிடைக்கிறது.
வாட்ஸ்ஆப் மூலம் பணம் அனுப்பும் செட்டிங்ஸை ஆக்டிவேட் செய்வது எப்படி
| WhatsApp Payments feature now live in India Here s how to get
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சமனது நேரடியாகவே வாட்ஸ்ஆப் வழியாக பணத்தை அனுப்ப மற்றும் பெற பயனர்களை அனுமதிக்கும். எனினும், இந்த சேவை இப்போது வரையிலாக வணிக பயன்பாட்டிற்கான ஆதரவை கொண்டிருக்கவில்லை. இந்த அம்சத்தை எப்படி அணுகுவது மற்றும் எப்படி பயன்படுத்துவது என்பதை, எளிய வழிமுறைகளின் கீழ் விரிவாக காண்போம்
01. எஸ்எம்எஸ் வழியாக தங்கள் மொபைல் எண்ணை சரிபார்க்க வேண்டும்
நேரடி வங்கி பணபரிமாற்றங்களை அனுமதிக்க இந்தியாவின் யூபிஐ-தனை நம்பியிருக்கும் பேமன்ட்ஸ் அம்சமானது வாட்ஸ்ஆப்பின் செட்டிங்ஸ்-ல் தோன்றும்.முதலில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கும் பயனர்கள், எஸ்எம்எஸ் வழியாக தங்கள் மொபைல் எண்ணை சரிபார்க்க வேண்டும்.
02. உங்களின் வங்கியை சரிபார்த்து கொள்ளவும்
பின்னர் யூபிஐ-க்கு ஆதரவாக உள்ள பெரும்பாலான வங்கிககளில் உங்களின் வங்கியை ஒருமுறை சரிபார்த்து கொள்ளவும். அந்த பட்டியலில் எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ, எஸ்.பி.ஐ., யெஸ் வங்கி, அலபாத் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்றவை பிரபலமான வங்கிகள் உள்ளன.
03. புதிய வங்கி கணக்கை சேர்க்கும் விருப்பம்
பின்னர் வாட்ஸ்ஆப்பின் செட்டிங்ஸ் நுழையவு. அங்கே, நீங்கள் ஒரு வங்கி கணக்கை சேர்க்க கூடிய (ஆட் பேங்க் அக்கவுண்ட்) விருப்பத்தை காண்பீர்கள். அந்த புதிய வங்கி கணக்கை சேர்க்கும் விருப்பத்தை டாப் செய்யவும்.
04. மொபைல் எண்ணை மீண்டும் சரிபார்க்கும்
அதனை தொடர்ந்து வாட்ஸ்ஆப் அதன் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு உங்களை பணிக்கும். நீங்கள் ஏற்றுக்கொண்டதும், உங்கள் எண்ணை சரிபார்க்கும்படி கேட்கும்
05. வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டில் உள்ள அதே மொபைல் எண்
தொடர்ந்து உங்கள் வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை சரிபார்க்கும் பணியை யூபிஐ (UPI) நிகழ்த்தும். ஆக இங்கு உங்களால் வழங்கப்பட்டுள்ள மொபைல் எண் கொண்டு தான் உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் தொடங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ளவும்.
06. இறுதியாக ஒருமுறை மொபைல் எண்
சரிபார்க்கப்பட்டவுடன், வங்கிகளின் பட்டியல் தோன்றும். அதில் உங்களுக்கான வாங்கி தேர்வை நிகழ்த்தவும். இங்கு பயனர்கள் தங்கள் டெபிட் அட்டையின் கடைசி ஆறு இலக்கங்களை, காலாவதியாகும் விவரங்களுடன் வழங்க வேண்டும்.
07. யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பப வாட்ஸ்ஆப் உதவும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை சரியாக செய்தால், ஒரு விர்ச்சுவல் பேயீ அட்ரெஸ் ( Virtual Payee Address - வி.பி.ஏ) உருவாக்கம் பெறும். இப்போது நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாட்ஸ்ஆப் ப்ரைவேட் (தனிப்பட்ட) சாட் அல்லது வாட்ஸ்ஆப் க்ரூப் சாட் வழியாக கூட பணம் அனுப்பப வாட்ஸ்ஆப் உதவும்.
08. அம்சம் வேலை செய்யும்
காட்சிப்படும் + குறியை டாப் செய்ய நீங்கள் பேமன்ட்ஸ் விருப்பத்தை காண்பீர்கள். மற்ற நபரும் இந்த பேமன்ட்ஸ் அம்சத்தினை ஆக்டிவேட் செய்திருந்தால் தான் இந்த அம்சம் வேலை செய்யும் என்பதும் குறிப்பித்தக்கது.ஒருவேளை மற்ற நபர் இந்த அம்சத்தினை கொண்டிருக்கவில்லை எனில் உங்களுக்கான எச்சரிக்கை கிடைக்கும்

No comments:
Write comments