தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Wednesday, June 28, 2017

TNPSC - தமிழ் இலக்கணம் ஆகுபெயர்

 

TNPSC  தமிழ் இலக்கணம் ஆகுபெயர் ----

ஆகு பெயர் எனப்படுவது, ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது

ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது. பெயர்ச்சொல்லின் ஒரு இயல்பாக வருவது. ஆகுபெயர் எல்லாமே பெயர்ச்சொல். (பெயர்ச்சொல் எல்லாம் ஆகுபெயராகாது.)
எடுத்துக்காட்டுகள்
1-நெல் அறுத்தான் உண்மையில் அறுக்கப்பட்டது கதிர். நெல் என்பது இங்கு ஆகுபெயர் ஆனது.
2-வெற்றிலை நட்டான். நடப்பட்டது வெற்றிலை மரம். இங்கு வெற்றிலை மரத்துக்காக வெற்றிலை ஆகுபெயர் ஆனது.
வகைகள்
ஆகுபெயர்கள் 19 வகைப்படும். அவையாவன
  • 1-பொருளாகு பெயர்
  • 2-சினையாகு பெயர்
  • 3-காலவாகு பெயர்
  • 4-இடவாகு பெயர்
  • 5-பண்பாகு பெயர்
  • 6-தொழிலாகு பெயர்
  • 7-எண்ணலளவையாகு பெயர்
  • 8-எடுத்தலளவையாகு பெயர்
  • 9-முகத்தலளவையாகு பெயர்
  • 10-நீட்டலளவையாகு பெயர்
  • 11-சொல்லாகு பெயர்
  • 12-கருவியாகு பெயர்
  • 13-காரியவாகு பெயர்
  • 14-கருத்தாவாகு பெயர்
  • 15-உவமையாகு பெயர்
  • 16-அடை அடுத்த ஆகுபெயர்
  • 17-தானியாகுபெயர்
  • 18-இருபடியாகு பெயர்
  • 19-மும்மடியாகு பெயர்
                பொருளாகுபெயர்
முதல் பொருளின் பெயர், அதனோடு தொடர்புடைய இன்னொரு பொருளுக்கு ஆகி வருதல்.
             எடுத்துக்காட்டு
மல்லிகை போன்ற வெண்மை.
இங்கு மல்லிகைப் பூவுக்காக மரம் வந்தது.
(இது சினைக்காகப் பொருள் ஆகியது)
சினையாகு பெயர்
வெற்றிலை நட்டான்.
வெற்றிலைச் செடிக்காக வெற்றிலை ஆகி வந்தது.
(இது பொருளுக்காகச் சினை ஆகியது)
காலவாகு பெயர்
             எடுத்துக்காட்டு
மாரி பொழிந்தது – மழை பொழிந்தது
சித்திரை வந்தாள் – சித்திரையில் பிறந்தவள் வந்தாள்.
இடவாகு பெயர்
இடத்தின் பெயர் இன்னொன்றுக்காய் ஆகி வருவது.
               எடுத்துக்காட்டு
  • இங்கிலாந்து வென்றது: இங்கு இங்கிலாந்து என்பது இங்கிலாந்தைக் குறிக்காமல், இங்கிலாந்துக்காக விளையாடும் இங்கிலாந்து அணியைக் குறித்தது. (அணிக்கு ஆகி வந்தது) இது இடவாகுபெயர்.
  • உலகம் வியந்தது: இதில் உலகம் என்பது மண்ணுலகத்தைக் குறிக்காமல், அதில் வாழும் மக்களைக் குறித்தது (மக்களுக்கு ஆகி வந்தது). இது இடவாகு பெயர்
பண்பாகு பெயர்
             எடுத்துக்காட்டு
வீட்டிற்கு வெள்ளை அடித்தான்: ‘வெள்ளை’ என்னும் நிறத்தின் பெயர், அந்நிறத்தையுடைய சுண்ணாம்புக்கு ஆகி வந்தது. இங்கு ‘வெள்ளை’ என்பது ஆகு பெயர். இதனை பண்பாகுபெயர் என்பர்.
தொழிலாகு பெயர்
புழுங்கல் காய்ந்தது – காய்ந்தது அரிசி புழுக்கியதால்(தொழில்) புழுங்கல் என ஆகியுள்ளது.
சொல்லாகு பெயர்
ஏதோ ஒன்றுக்காக சொல் கருவி ஆகி வருவது.
              எடுத்துக்காட்டு
இந்தப் பாட்டு என் சிந்தனையைத் தூண்டியது. இங்கே பாட்டின் பொருள்தான் சிந்தனையைத் தூண்டியது. பொருளுக்காக பாட்டு என்ற சொல் கருவி ஆகி வந்தது.
காரியவாகு பெயர்
            எடுத்துக்காட்டு
எழுத்தாளர் தரமான இலக்கியம் படைக்க வேண்டும். இலக்கியம் என்பது காரியம். இங்கு இலக்கியம் என்பது தரமான சிறுகதைக்கு காரியமாக ஆகி வருகிறது.
கருத்தாவாகு பெயர்
கருத்தா – படைத்தவர் கருத்தா.
வைரமுத்துவை வாசி. இங்கு வைரமுத்து எழுதிய கவிதைக்காக வைரமுத்து என்கின்ற கருத்தா ஆகி வருகிறது.
உவமையாகு பெயர்
உவமேயத்துக்காக உவமானம் ஆகி வருவது.
           எடுத்துக்காட்டு
மயில் வந்தாள். இங்கே உண்மையில் வந்தது ஒரு பெண். பெண் என்ற உவமேயத்துக்காக மயில் என்ற உவமானம் ஆகி வருகிறது.
தானியாகு பெயர்
தானி என்றால் இடம்.
இடம் என்பது இங்கே ஒரு பொருள் இருக்கின்ற இடத்தைக் குறிக்கின்றது.
            எடுத்துக்காட்டு
விளக்கு முறிந்தது.
விளக்கு என்பது காரணப்பெயர். விளக்கம் தரும் சுடரினால்தான் விளக்கு. சுடர் முறியாது. விளக்கம் தருகின்ற தண்டு முறிந்து விட்டது. விளக்குக்காக அந்த இடம் ஆகி வருகிறது.
நன்னூல் பாடல்
        "பொருள் முதல் ஆறோடு அளவைசொல் தானி
         கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
         ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
         தொன்முறை உரைப்பன ஆகுபெயரே"
                                            - நன்னூல் - 290

No comments:
Write comments