தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, April 15, 2017

தாவரவியல்:தண்டின் அளவு மற்றும் அமைப்பின் அடிப்படைகள்

 

-------------🍃 தண்டின் அளவு மற்றும் அமைப்பின் அடிப்படையில் பூக்கும் தாவரங்கள் வகைகள் - 3
1. சிறு செடிகள்
2. புதர்ச் செடிகள்
3. மரங்கள்
1. சிறு செடிகள்:
🌱 மென்மையான தண்டு உடைய பசுமையான சிறிய தாவரங்கள் சிறு செடிகள் எனப்படும்.
🌱 தண்டு கட்டைத் தன்மையற்று, ஒரு மீட்டர் உயரத்திற்கு தான் வளர்ச்சியடையும்
(எ.கா.)முள்ளங்கி, கோதுமை, நெல், சூரியகாந்தி
2. புதர்ச் செடிகள்:
🌱 மெலுந்த ஆனால் கடினமான, கட்டைத் தண்டுடைய நடுத்தர அளவுள்ள தாவரங்கள் புதர் செடிகள்.
🌱 தெளிவான மையத்தண்டு அற்றது.
🌱 தோற்றத்தில் பல கிளைகளை உடையது.
(எ.கா.) ரோஜா, மல்லிகை, துளசி, எலுமிச்சை, குரோட்டன்ஸ்
3. மரங்கள்:
🌱 உயரமான பெரிய அளவான, தெளிவான, கடினமான, கட்டையான தண்டு உடைய தாவரங்கள் மரங்கள் எனப்படும்.
🌱 கிளைகள் மற்றும் இலைகளை உருவாக்க கிளைகள் மற்றும் இலைகள் உருவாக்கும் மையத்த்ண்டுஅட்டிமரம் எனப்படும்.
(எ.கா.) வேம்பு, மா, பலா, தென்னை ஆலமரம்
🍃தாவரங்கள் பாகங்கள்:-
வாழிடம் அடுத்து வேர் பற்றிய சில தகவல்கள்:-

🌱 தரைக்கு கீழே வளரும் தாவர உறுப்பு - வேர்
🌱 கருவின் முளைவேரிலிருந்து இவை தோன்றுகின்றன.
🌱 வேர் தொகுப்பு வகைகள் - 2
(I.) ஆணி வேர் தொகுப்பு
(II.) வேற்றிட வேர் தொகுப்பு

(I.) ஆணி வேர் தொகுப்பு:
🌴 இது கருவின் முளை வேரிலிருந்து தோன்றி அதிக ஆழம் வரை சென்று முதன்மை வேர் (அ) ஆணிவேர்
🌴 இது இரண்டாம் நிலை வேர்கள், மூன்றாம் நிலை வேர்கள் என்ற பக்கவாட்டு வேர்களை உருவாக்குகிறது.
🌴 பெரும்பான்மையான இரு வித்தலை தாவரங்களில் ஆணிவேர் தொகுப்பு காணப்படும்.
(எ.கா.) மா, வேம்பு, புளி
🌳ஆணிவேரின் மாற்றுரு:-
🌲 ஆணிவேரின் மாற்றுரு வகைகள் - 2

(அ) சேமிப்பு வேர்கள்:
🌱 முதன்மை வேர்கள் உணவை சேமித்து வைப்பதால் பருத்து சதைப்புற்றுடன் காணப்படுகிறது.
🌱 சேமிப்பு வேர்கள் வகைகள் - 3
(i) கூம்பு வடிவம் - கேரட்
(ii) கதிர் வடிவம் - முள்ளங்கி
(iii) பம்பர வடிவம் - பீட்ரூட், டர்னிப்

(ஆ) சுவாச வேர்கள்:
🌱 கடற்கரையோரம் உள்ள சதுப்புநிலங்களில் உள்ள தாவரங்களில் உப்பு நிறைந்த நீருக்குள் புதைந்திருக்கும் சாதாரண வேர்களில் இருந்து செங்குத்து வேர்கள் கிளம்பி தரைக்கு மேல் வளர்கின்றன.
🌱 இவை வாயு பரிமாற்றத்திற்கு உதவுகிறது.
(எ.கா.) அவசீனியா (வெள்ளை அலையற்றி)

(II.) வேற்றிட வேர்த் தொகுப்பு:-
🌴 முளை வேர் தவிர தாவரத்தின் வேறெந்த பகுதியிலிருந்து வளரும் வேர் வேற்றிடவேர் எனப்படும்.
🌴 மெல்லிய ஒரே அளவிலான கொத்தாக வேற்றிடவேர் தோன்றுகின்றன.
🌴 இவ்வேர்கள் நார்கள் போன்று தோற்றமளிப்பதால் "சல்லிவேர் தொகுப்பு" எனவும் அழைக்கப்படும்.
🌴 பெரும்பாலான ஒரு வித்திலை தாவரங்களில் இவ்வேர்தொகுப்பு காணப்படும்.
(எ.கா.) நெல், புல், சோளம், மூங்கில், தென்னை

வேரின் பணிகள்:
🌲 வேர் மண்ணிலிருந்து நீர் & கனிம உப்புகளை உறிஞ்சுகிறது.
🌲 இவற்றை தாவரத்தின் புற பகுதிகளுக்கு கடத்துகிறது.
🌲 தாவரத்தை மண்ணில் நிலை நிறுத்த செய்கிறது.

🌳வேற்றிட வேரின் மாற்றுரு:-
🌱 இவற்றின் வகைகள் - 4
(அ) சேமிப்பு வேர்கள்:
(i) வேர் கிழங்குகள் - சர்க்கரை வள்ளி கிழங்கு
(ii) கொத்து வேர்கள் - டாலியா

(ஆ) தாங்கு வேர்கள்
(i) தூண் வேர்கள் - ஆலமரம்
(ii) முண்டு வேர்கள் - சோளம், கரும்பு, மூங்கில்

(இ) ஒட்டுண்ணி வேர்கள் - கஸ்குட்டா

(ஈ) தொற்று வேர்கள் - வாண்டா (ஆர்கிட்)------------------------------------------------------------------------------------------

No comments:
Write comments