தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Wednesday, April 19, 2017

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் அறிமுகம்

 

-

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் அறிமுகம்:


இதுவரை தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவம் மூலம் விண்ணப்பித்து வந்தனர். இந்த ஆண்டு புதிதாக ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்பட்சத்தில் ஆசிரியர்கள் உபரியாக இருக்கும் நிலை ஏற்படும். அந்த வகையில், தென் மாவட்டங்களில் பள்ளிகளில் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். ஒன்று முதல் 6-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில்தான் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதேநேரத்தில் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேருகிறார்கள். அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளே இதற்கு காரணம். ஜெயலலிதாவின் ஆசியோடு செயல்படும் இந்த அரசு, கல்வித் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வருகிறது.கல்வித்துறையானது இந்தி யாவுக்கே வழிகாட்டும் ஒரு துறையாக இருந்து வருகிறது. பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றம் குறித்து பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப் படும். பாடத்திட்டத்தை மாற்று வது குறித்து முன்னாள் துணை வேந்தர்கள் உள்ளிட்டசிறந்த கல்வியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்துகொண்டிருக்கி றோம். நிச்சயம் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக பாடத்திட்டம் இருக்கும். ‘நீட்’ உள்ளிட்ட அகில இந்திய அளவி லான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த அவர்களுக்கு அடுத்த ஆண்டி லிருந்து பயிற்சி அளிக்கலாமா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

-------------------------------------------------------------------------------------------------------

No comments:
Write comments