தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, April 1, 2017

ரூ.249க்கு 10 ஜிபி டேட்டா - மாதம் 300 ஜிபி வழங்கும் நிறுவனம்: அப்போ ஜியோ?

 

-----

ரூ.249க்கு 10 ஜிபி டேட்டா - மாதம் 300 ஜிபி வழங்கும் நிறுவனம்: அப்போ ஜியோ?


ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் கடந்த ஆறு மாதங்களாக இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், மேலும் 15 நாட்களுக்கு இலவச சேவைகளை ஜியோ நீட்டித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்ட ஜியோ, பிரைம் திட்டத்தில் இணைந்து கொள்ள ஏப்ரல் 15-ந்தேதி தான் கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜியோ போட்டியை எதிர்கொள்ள பி.எஸ்.என்.எல். சார்பில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.249 செலுத்தினால் தினமும் 10 ஜிபி வரையிலான தரவுகளை டவுன்லோடு செய்ய முடியும் என பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



அதிகபட்ச டேட்டா மட்டுமின்றி அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் தினமும் இரவு 9.00 மணி முதல் காலை 7.00 மணி வரை வழங்கப்படுகிறது. ஞாயிற்று கிழமைகளிலும் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி இந்த சலுகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பி.எஸ்.என்.எல். புதிய சலுகைகள் புதிய பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை சேர்க்கவே அறிவிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 'வயர்லைன் பிராட்பேண்ட் மூலம் இந்தியாவில் நாள் ஒன்றிற்கு 10 ஜிபி அளவு டவுன்லோடு டேட்டா வழங்கும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல். மட்டுமே', என அந்நிறுவனத்தின் தலைவர் என்.கே. குப்தா தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------

No comments:
Write comments